பீகாரில் என்எச்-327இ-யின் கல்காலியா – பஹதூர்கஞ்ச் இடையே மொத்தம் 49 கி.மீ. தூரத்திற்கு 4வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 70% முடிந்துள்ள நிலையில் பெரிய பாலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த 3ம் எண் தூணின் கீழ் எதிர்பாராத விதமாக லேசான விரிசல் ஏற்பட்டு தூண் உள்ளிறங்கியது. இதனால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை.
மீச்சி நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு இந்த நதியின் வழியாக வெளியேறியது. இதனால் மணற்பாங்கான பகுதியில் அரிப்பு ஏற்பட்டு விரிசல் உண்டாகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விரிவான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு காரணங்களை ஆய்வு செய்யும். சரிசெய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கும்.
எஸ்.சதிஸ் சர்மா