உதவி பிரிவு அதிகாரிகளாக பணியாற்றும் 1592 பேரை பிரிவு அதிகாரிகளாக பெரும் எண்ணிக்கையில் பணியமர்த்த பணியாளர் அமைச்சகத்தின், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்ட மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பதவி உயர்வு நியமன ஆணைகளை விரைவில் அளிக்கப்படும் என்று கூறினார்.
இந்தப் பதவி உயர்வு நடவடிக்கைகள் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட கால கோரிக்கைகளின் அடிப்படையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பெருமளவிலான பணியாளர்களுக்கு அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. எஞ்சிய 2000 பேருக்கான பதவி உயர்வு குறித்த நடைமுறை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சுமார் 9 ஆயிரம் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் 4,000 பதவி உயர்வு ஆணைகள் அளிக்கப்பட்டதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
எம்.பிரபாகரன்