குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஜூலை 04, 2023 அன்று அஸ்ஸாமுக்கு செல்கிறார். அங்கு அவர், குவஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஐஐடி- யின் 25வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
குவஹாத்திக்கு வந்தவுடன், குடியரசு துணைத்தலைவர் காமாக்யா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து தரிசனம் செய்வார்.
தமது பயணத்தின் போது, ஐஐடி கவுகாத்தியில் உள்ள மாணவர்களுடன் அவர் உரையாடுவார்.
எம்.பிரபாகரன்