உணவு தானியங்களின் கொள்முதல் மற்றும் விநியோகத்திற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், வர்த்தக மற்றும் தொழில்துறை, ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டினார்.
கூட்டுறவு அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் செயல்பட வேண்டும் என்று கூறினார். புதுதில்லியில் இன்று உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஏற்பாடு செய்திருந்த உணவுத்துறை அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய அரசு தர வேண்டிய நிலுவைகள் குறித்து விரைவாக சமர்ப்பிக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை அப்போது அவர் கேட்டுகொண்டார். அதன் மூலம் அதனை அவர்கள் விரைவில் அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
மக்களுக்கு சேவையாற்ற ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். புதிய சர்க்கரை-எத்தனால் இணையதளத்தையும் திரு பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.
இம்மாநாட்டில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 17 உணவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
எம்.பிரபாகரன்