குவாலியரில் உள்ள அடல்பிகாரி வாஜ்பாய்-இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக கல்விக்கழக (ஏவிபி-ஐஐஐடிஎம்) 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அடல்பிகாரி வாஜ்பாய் – இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக கல்விக்கழகத்தின் (ஏவிபி-ஐஐஐடிஎம்) 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (13.07.2023) பங்கேற்று உரையாற்றினார். இந்த விழாவின் போது கல்விக்கழகத்தின் 500 படுக்கைகள் கொண்ட ஆடவர் விடுதிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

 மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர்,  வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கியுள்ள மக்கள் பற்றி மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.  சமூகம் பற்றிய பொறுப்புணர்வு, அவர்களின் முன்னேற்றத்தை நிரூபிக்கும் என்றும்  திறன்களை வளர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். பழங்குடி சமூகங்கள், பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினரின் நல்வாழ்வுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இருப்பினும், விளிம்புநிலை மற்றும் நலிந்த பிரிவினரின் மேம்பாட்டுக்கு பணியாற்றுவது சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.

 எந்தப்பணியில் இருந்தும்  பணப்பயன்களை பெறுவது முக்கியமானது என்றாலும், பணியில் திருப்தி என்பது அதைவிட முக்கியமானது என்று திருமதி முர்மு கூறினார். ஒரு தீர்மானத்துடன் நல்லப்பாதையை தேர்வு செய்து மாணவர்கள் முன் சென்றால் நிச்சயமாக தங்களின் இலக்குகளை அவர்கள் அடைவதோடு, வாழ்க்கையிலும் திருப்தி அடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply