வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இந்திய விமானப்படை தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

1.ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தற்போதுள்ள வெள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, இந்திய விமானப்படை பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில், மொத்தம் 40 முறைகளில், 126 பேர் மீட்கப்பட்டு, 17 டன் நிவாரணப் பொருட்கள் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன.

2. ஹரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நோக்கி பெரிய அளவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிஹாரா, அலாவுதீன் மஜ்ரா, பிஷன்கர், செக்டா, புன்னி, மும்னி, செக்டி மற்றும் ஜான்சுய் ஆகிய கிராமங்களுக்கு எம்-17 ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள், தார்பாய்கள், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

3. விமானப்படை வீரர்கள், எம்-17 மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள், ஏஎன்-32 மற்றும் சி-130 விமானங்கள் போன்ற அனைத்தும் வெள்ளமீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளன.

எம்.பிரபாகரன்

Leave a Reply