அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை, வடபழஞ்சியில் பின்னக்கிள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். மதுரை வடபழஞ்சியில் எல்கோசெஸ்ஸில் உள்ள பின்னக்கிள் இன்பொடெக் சொலுயுசன்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்னணு நிறுவனம் 34.09 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து, பின்னக்கிள் இன்பொடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக 1,80,000 சதுர அடி பரப்பளவில் ரூ.120 கோடி முதலீட்டில் கட்டுமானப் பணிகளை முடித்து 950 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்துள்ளது.

கே.பி.சுகுமார்

Leave a Reply