சந்திரயான் -3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படிருப்பது விண்வெளி ஸ்டார்ட்அப்கள் மற்றும் விண்வெளி தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என்று மத்திய அறிவியல் & தொழில்நுட்பம்(தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஜி20 இளம் தொழில்முனைவோர் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், 2020ல் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையை தனியார் பங்கேற்புக்கு அனுமதி அளித்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவின் முதல் தனியார் விக்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாறு படைத்ததைச் சுட்டிக்காட்டினார். ஜி20 நாடுகளின் இளம் விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்கள், விண்வெளி தொழில்முனைவோரின் புதிய யுகத்தை, கூட்டுப் பணி முறையில், லாபகரமான ஸ்டார்ட்அப் முயற்சிகள் மூலம் விண்வெளி சாத்தியங்களை ஆராயுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்தியா இதுவரை ஏவியுள்ள 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 389 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடந்த 9 ஆண்டுகளில் ஏவப்பட்டவை என்று அமைச்சர் தெரிவித்தார். ஜனவரி 2018 முதல் இன்று வரை, கொலம்பியா, ஃபின்லாந்து, இஸ்ரேல், லிதுவேனியா, லக்சம்பர்க், மலேசியா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்களைத் தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜப்பான், கொரியக் குடியரசு உள்ளிட்ட முக்கிய ஜி20 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது என ஆவர் கூறினார்.
எம்.பிரபாகரன்