கடைக்கோடி கிராமங்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிர் உதவ வேண்டும்: டேராடூனில் சுகாதார அமைச்சகத்தின் ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிரின் 2வது நாளில் டாக்டர் மன்சுக் மாண்டவியா பேச்சு.

டேராடூனில் நடைபெற்ற ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிருக்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, கடைக்கோடி கிராமங்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை அடைய ஸ்வஸ்த்ய சிந்தன் ஷிவிர் உதவுமெனக் குறிப்பிட்டார். உத்தராகண்ட் முதலமைச்சர் திரு.புஷ்கர் சிங் தாமி, சிக்கிம் முதலமைச்சர் திரு.பிரேம் சிங் தமாங் மற்றும் தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டம் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், “நாட்டிலிருந்து காசநோயை முழுவதும் அகற்ற மக்களின் பங்கேற்பு மிகவும் இன்றியமையாதது. இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்றுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’’ என்றார். காசநோய் ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்வின் கடைசி நாளில், ஆயுஷ்மான் பவா, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஒழிப்பு என பல்வேறு சுகாராத் திட்டங்கள் குறித்த அமர்வுகள் நடைபெற்றன.

திவாஹர்

Leave a Reply