மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு.அமித் ஷா மற்றும் மத்திய விமான போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய எம். சிந்தியா ஆகியோர் முக்கிய விமான நிலையங்களுக்கான வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான இயக்கத்தின் காரணமாக எழும் தேவைகளை நிவர்த்தி செய்வதை இந்த சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பயணிகளின் விரைவான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்திற்கான தரநிலைகளை உருவாக்கவும் வழங்கவும் சந்திப்பு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கிய விமான நிலையங்களில் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் உள்துறை அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பிற ஏஜென்சிகள் தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
மத்திய உள்துறை செயலாளர் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், IB, குடியேற்ற பணியகம் (BOI), சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (BCAS), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எம்.பிரபாகரன்