இன்று (ஜூலை 17, 2023) ராஷ்டிரபதி பவனின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தின் அமர்வுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்திய பாரம்பரியத்தில் மனிதநேயம் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதாகவும், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்குச் சேவை செய்து வருகிறது எனவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இயற்கை பேரழிவுகள் மற்றும் சுகாதார அவசரநிலைகளின் போது, செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணப் பணிகள் மூலம் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். மனிதகுலத்தின் நன்மைக்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இரத்த தான மையங்கள் மூலம், நாட்டின் இரத்தத் தேவையில் 10 சதவீதத்தை பூர்த்தி செய்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் சுட்டிக் காட்டினார். இரத்த தானம் தொடர்பான வதந்திகளை போக்கவும், இளைஞர்களை அதிக அளவில் இரத்த தானம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
எஸ்.சதிஸ் சர்மா