குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள உள்கட்டமைப்பு குறைபாடுகளை மதிப்பாய்வு செய்ய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அழைப்பு.

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள உட்கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய வேண்டுமென  தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளார். வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அதற்கானத் தகவல்களை வழங்குமாறும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு குழந்தைகள் நலக் குழுவை நிறுவுவதை சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் பிரிவு 27 கட்டாயமாக்கியுள்ளது.

மிஷன் வாத்சல்யா திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் நலக் குழுவை அமைப்பதற்காகவும், அவற்றின் செயல்பாட்டுக்காகவும் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டம், ஒவ்வொரு குழந்தைகள் நலக்குழுவுக்கும் ரூ.9,25,800/ நிதியுதவி வழங்குகிறது.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply