புதுதில்லியில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மண்டல மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மண்டல மாநாட்டிற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்புப்படை ஒருங்கிணைப்புடன் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு மூலம் சாதனை அளவாக ஒரே நாளில் ரூபாய் 2,378 கோடி மதிப்பிலான 1.40 லட்சம் கிலோ கிராமுக்கு மேலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித்ஷா, இந்தியா போன்ற நாடுகளில் போதைப்பொருள் கடத்தலும், அதன் உபயோகமும், எதிர்கால தலைமுறையினரை அழிப்பதோடு, தேசிய பாதுகாப்பையும் பாதிப்பதாகக் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்புடைய 10 லட்சம் கிலோ கிராம் போதைப்பொருள் கடந்த ஆண்டு அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். போதைப்பொருளுக்கு ஒரு இளைஞர் கூட அடிமையாகாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது மோடி அரசின் நோக்கம் என்பது அவர் தெரிவித்தார். போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

போதைப்பொருளை கண்டறிதல், அதற்கான கட்டமைப்பை அழித்தல், குற்றவாளிகளை கண்டறிதல், போதைப்பொருளுக்கு எதிரான முழு தடுப்புப்பணிக்காக அதற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு ஆகியவற்றில் சமமான  கவனத்தை செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply