பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையில் பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை பாதுகாப்பு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது. இக்குழு ஜூலை 20-ம் தேதிக்குள் தங்களது ஆய்வை நிறைவு செய்து 10 நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இச்சாலை 2023 மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. 118 கிமீ நீளமுள்ள பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலை, அப்பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது. இச்சாலை, பெங்களூரு – மைசூரு இடையேயான பயண நேரத்தை கிட்டத்தட்ட பாதியாக வெறும் 75 நிமிடங்களாகக் குறைத்துள்ளது.
பிடாடி, ராம் நகரா, சன்னப்பட்டணா, மடூர், மாண்டியா மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை தீர்க்கும் வகையில், இச்சாலை 4 ரயில்வே மேம்பாலங்கள், 9 பெரிய பாலங்கள், 40 சிறிய பாலங்கள், 89 சுரங்கப்பாதைகள் மற்றும் மற்றும் 6 புறவழிச்சாலைகளை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.
எஸ்.சதிஸ் சர்மா