பசுமை விமான நிலைய கொள்கை, 2008 இன் கீழ் வடகிழக்கு பிராந்தியத்தில் இரண்டு பசுமை விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

பசுமை விமான நிலையங்கள் (ஜி.எஃப்.ஏ) கொள்கை, 2008ஐ மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது நாட்டில் புதிய பசுமை விமான நிலையங்களை உருவாக்குவதற்கான நடைமுறை மற்றும் நிபந்தனைகளை வரையறுக்கிறது. ஒப்புதலில் இரண்டு கட்ட செயல்முறை உள்ளது. அதாவது இட ஒப்புதல் ‘ மற்றும் ‘கொள்கை ரீதியான’ ஒப்புதல்.

அஸ்ஸாம் மாநிலம் கச்சாரில் உள்ள டோலு டி.இ.யில் பசுமை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான ‘இட ஒப்புதல்’ வழங்குவதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) பசுமை விமான நிலைய கொள்கை, 2008 இன் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் (எம்.ஓ.சி.ஏ) விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. பசுமை விமான நிலைய கொள்கையின் படி, இந்த முன்மொழிவு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் (எம்.ஓ.டி) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு அவர்களின் கருத்துகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பங்குதாரர்களுடனான இந்த ஆலோசனையின் பின்னர், இட ஒப்புதல் வழங்குவது தொடர்பாக பசுமை விமான நிலையங்கள் குறித்த வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரைக்காக முன்மொழிவு வைக்கப்பட வேண்டும்.

பசுமை விமான நிலைய கொள்கை, 2008 இன் படி, திட்டத்திற்கான நிதி, நிலம் கையகப்படுத்துதல், விமான நிலைய திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாநில அரசு உட்பட சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டாளரிடம் உள்ளது (மாநில அரசு திட்ட முன்மொழிபவராக இருந்தால்). விமான நிலையங்கள் கட்டுவதற்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல், தடைகளை நீக்குதல், நிதி இறுதி செய்தல் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

வடகிழக்கு பிராந்தியத்தில் பாக்யாங் மற்றும் இட்டாநகர் (ஹோலோங்கி) ஆகிய இரண்டு பசுமை விமான நிலையங்கள், ஜி.எஃப்.ஏ கொள்கை, 2008 இன் கீழ் கட்டப்பட்டுள்ளன.

வடகிழக்கு பிராந்தியம் உட்பட பிராந்திய விமான இணைப்பை ஊக்குவிக்கவும், விமான பயணத்தை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 21-10-2016 அன்று பிராந்திய இணைப்பு திட்டம் (ஆர்.சி.எஸ்) – உடான் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்டது.

உடான் திட்டத்தின் கீழ், வடகிழக்கு பிராந்தியத்தில் பாசிகாட், தேஜு, இட்டாநகர் (ஹோலோங்கி), ஜோர்ஹாட், லீலாபரி, ரூப்சி, தேஜ்பூர், ஷில்லாங் (பராபானி), திமாபூர் மற்றும் பாக்யாங் ஆகிய 10 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன / புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு) இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply