கடலூர் மாவட்டம், சேத்தியார்தோப்பு அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்கு விவசாயிகள் நிலம் அளித்தது தொடர்பாக இன்று வரை பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே பயிரிடப்பட்ட விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில், என்.எல்.சி நிர்வாகம் பயிர்களை கனரக வாகனங்களை கொண்டு அழித்து வருவது மிகவும் கண்டிக்க தக்கது.
என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் அளித்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிப்பதாக உறுதியளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது மிகவும் வருந்த தக்கது.
நிலம் அளித்த விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளான குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், நிலத்திற்கு உரிய இழப்பீடும் வழங்குவது என்.எல்.சி நிர்வாகத்தின் கடமையாகும். அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தற்பொழுது அழிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடும், மீதமுள்ள விவசாய நிலங்களுக்கு உரிய கால அவகாசமும் அளிக்க வேண்டும். மத்திய அரசு என்.எல்.சி நிர்வாகத்திடம் பேசி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற துணை நிற்கவேண்டும் என்று தழிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா