இந்தியா, வங்கதேசம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடல் விஞ்ஞானிகளின் கூட்டுப் பயணம், புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையத்தால் (இன்கோயிஸ்) கொழும்பு பாதுகாப்பு உச்சிமாநாட்டின் (சி.எஸ்.சி) பிராந்திய கட்டமைப்பின் கீழ் ஜூலை 24, 2023 அன்று நிறைவடைந்தது. இந்தியப் பெருங்கடலின் பிராந்திய சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கணிப்பது, நிர்வகிப்பது, கடல் தரவுகளைச் சேகரிப்பது ஆகியவற்றுடன், கடல் கண்காணிப்பு மற்றும் சேவைகளில் திறனை உருவாக்குவதே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.
சி.எஸ்.சி கட்டமைப்பின் கீழ் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஓ.ஆர்.வி சாகர் நிதி கப்பலின் பயணம் தனித்துவமானதாக இருந்தது. இதில் பங்கேற்பாளர்கள் கடல் அளவுருக்களை அளவிடுதல் மற்றும் மாதிரியாக்குதல் போன்ற கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பிராந்தியத்தில் உள்ள அனைவரின் பொதுவான நன்மைக்காக மேம்பட்ட முன்னறிவிப்பு மற்றும் சேவைகளுக்கு வழிவகுக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்தது.
கடந்த நவம்பர் 2022 இல் கோவா மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற சி.எஸ்.சி கடலியல் வல்லுநர்கள் மற்றும் ஹைட்ரோகிராஃபர்களின் முதல் கூட்டுமுயற்சியின் விளைவாக ஜூன் 29, 2023 அன்று தொடங்கிய ஓ.ஆர்.வி சாகர் நிதி கப்பலின் பயணம் அமைந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
திவாஹர்