சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்ய சிவில் சமூக அமைப்புகளும் அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: ஜெய்ப்பூரில் நடைபெற்ற சி 20 இந்தியா உச்சி மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.

சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக சிவில் சமூக அமைப்புகள் (சி.எஸ்.ஓ) மற்றும் அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த பாதுகாப்பு  துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜூலை 29, 2023 அன்று நடைபெற்ற சிவில் 20 (சி 20) இந்தியா உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார். 2013 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ ஜி 20 ஈடுபாட்டுக் குழுவாக தொடங்கப்பட்ட சி 20, அதிகாரப்பூர்வ ஜி 20 எடுக்கும் பிரச்சினைகள் குறித்து அரசு சாரா கண்ணோட்டங்களை முன்வைக்க சிஎஸ்ஓக்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. இது உலகை பாதிக்கும் முதன்மை மற்றும் பொதுவான கவலைகளைப் பிரதிபலிக்கவும், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு ஒரு மன்றத்தை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

முழுமையான வளர்ச்சி என்ற இலக்கை அடைய சி.எஸ்.ஓ.க்கள் மற்றும் பாரம்பரிய அரசு கட்டமைப்புகளின் நன்மைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று திரு. ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். “அரசாங்க இயந்திரம் மிகவும் இறுக்கமாக கட்டமைக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டிருந்தாலும், முன்முயற்சிகள் பரந்த அளவில் கணிசமான பெரும்பான்மையினரின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன; சமுதாயத்தில் புதிய சிந்தனைகள் மற்றும் நடைமுறைகள் செயல்படுவதற்கு அதிக வாய்ப்பை வழங்கும்  கட்டமைப்புகளை சி.எஸ்.ஓக்கள் கொண்டுள்ளன. நவீன அரசு கட்டமைப்புகளில், அரசாங்கங்கள் புதுமையான மற்றும் சோதிக்கப்படாத யோசனைகளில் அவசரமாக செயல்பட முடியாது, ஆனால் சி.எஸ்.ஓக்கள் அடிமட்ட அணுகுமுறையில் செயல்படுவதால் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை எப்போதும் மாறும் கள யதார்த்தங்களுக்கு ஏற்ப செயல்பட முடியும். சி.எஸ்.ஓ.க்கள் அரசாங்கங்களுக்கான சக்தி பெருக்கிகளாக செயல்பட முடியும், “என்று அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த முழுமையான சுகாதாரம், கல்வி மற்றும் டிஜிட்டல் மாற்றம், பாலின சமத்துவம் முதல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை வரை பல்வேறு களங்களில் பல்வேறு சி 20 குழுக்கள் செயல்படுகின்றன. இன்றைய சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களின் அனைத்து பரிமாணங்களிலும் இந்த குழுக்கள் அதிகாரப்பூர்வ கொள்கைகள் மற்றும் திட்டங்களை பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply