சாலை விபத்துகளைக் குறைப்பதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு கட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது: மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்.

சிறந்த சேவைகளை வழங்குவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு கட்டமைப்பு  பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது என்று  மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு வி கே சிங் கூறியுள்ளார். தொலைத்தொடர்புத் துறையின் சாதனைகள் மற்றும் பிற துறைகளில் அத்துறையின் தாக்கம்  குறித்து  புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய  அவர், தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மொபைல் தொலைபேசி நெட்வொர்க் இருப்பதை உறுதி செய்வதற்காக தொலைத்தொடர்புத் துறையுடன் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

4 ஜி சேவைகள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக மொபைல் கோபுரங்களை நிறுவுவதன் மூலம் கிராமங்களில் 4 ஜி கவரேஜை மேலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார். இது சாலை விபத்துக்களை திறம்பட தடுக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில், 5ஜி நெட்வொர்க் விரிவாக்கம் வேகமாக நடைபெற்று வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். சுங்க நடைமுறைகளை  செயற்கைக்கோள் மற்றும் கேமரா அடிப்படையில் உருவாக்கி வருவதாகவும் திரு வி கே சிங் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply