“ஏழை எளிய மக்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிகையை தமிழக அரசு வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு முச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் முககவசத்திற்கு பதிலாக டீ கப் பயன்படுத்தியது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அரசு மருத்துவனையை நாடும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரும் உத்திரவாதம் இதுதானா?.

உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். தினசரி சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் வைத்துக்கொள்ள வேண்டியது அரசு மருத்துவனையின் கடமை. இப்படி மனித உயிர்களுடன் விளையாட கூடாது. இது மிகவும் கண்டிக்க தக்கது.

தமிழக அரசும், சுகாதாரத்துறையும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், உபகரணங்களையும், மருந்துகளையும் தங்குதடையின்றி வழங்கி முன்னரே இருப்பு வைக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையும், உத்திரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply