நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதன் மூலம் பெறப்பட்ட ரூ.704 கோடியை நிலக்கரி வளம் கொண்ட சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு நிலக்கரி அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், அதிகாரம் அளிக்கவும், ஒரு முன்னெடுப்பாக இந்த நிதிப் பரிமாற்றம் அமைந்துள்ளது.
6-வது சுற்று மற்றும் 5-வது சுற்று வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 2-வது முயற்சியின் கீழ் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்ட 18 நிலக்கரி சுரங்கங்களுக்கான முதல் தவணையாக ரூ.704 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தின் (சி.எம்.டி.பி.ஏ) சீர்திருத்தம் இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுத்தது. சி.எம்.டி.பி.ஏ படி, வெற்றிகரமான ஏலதாரர்கள் முன்பணத் தொகையின் முதல் தவணையை நிலக்கரி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். குறிப்பாக, மீதமுள்ள மூன்று தவணைகள் ஏலதாரர்களால் அந்தந்த மாநில அரசுகளுக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்படும், இது இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும்.
எஸ்.சதிஸ் சர்மா