தங்களுக்கு ஒரு சொந்த வீடு என்ற கனவை நனவாக்கியதற்கு நன்றி தெரிவித்து டெல்லி கல்காஜியில் வீட்டு வசதி பெற்ற பெண்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

தில்லியின் கல்காஜி பகுதியில் ‘குடிசை வீட்டுக்குப் பதிலாக அனைத்து வசதியுள்ள வீடு’ என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்ட பயனாளிகள் எழுதிய கடிதங்களால் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று  ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

தங்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரிடம்  இந்தக் கடிதங்களைப் பெண்கள் ஒப்படைத்தனர். பயனாளிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தங்கள் கனவை நனவாக்க உதவியதற்காகவும், திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை எளிதாக்கியதற்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஏழைகளின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

ட்விட்டரில் பிரதமர்  கூறியிருப்பதாவது:

” ‘குடிசை வீட்டுக்குப் பதிலாக அனைத்து வசதியுள்ள வீடு’ என்ற திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்ற தில்லி கல்காஜியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடமிருந்து கடிதங்களைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் @DrSJaishankar அங்கு சென்றபோது, அந்தப் பெண்கள் இந்தக் கடிதங்களை அவரிடம் ஒப்படைத்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தத் திட்டத்தின் மூலம், தங்களின் பல வருட கனவு நனவாகி, முழு குடும்பத்தின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது என்பதை அவர்கள் விவரித்தனர். கடிதங்களுக்கு மிக்க நன்றி! ஏழைகளின் நலனுக்காக எங்கள் அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply