மாற்று உரங்களை ஊக்குவிக்க நடவடிக்கை.

விவசாயத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, இயற்கை உரம் மற்றும் உயிரி உரங்களின் சீரான பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

மேலும், வடகிழக்குப் பகுதிக்கான கரிம மதிப்புத் தொடர் சங்கிலி மேம்பாட்டுத் திட்டம்  (எம்.ஓ.வி.சி.டி.என்.ஆர்), இயற்கை விவசாயத்திற்கான தேசிய திட்டம் (என்.பி.ஓ.எஃப்) போன்ற திட்டங்களின் கீழ், இயற்கை மற்றும் உயிரி உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகிறது. மேலும், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் தேசிய இயற்கை வேளாண்மை மையம் ஈடுபட்டுள்ளது.

ஜூன் 28, 2023 அன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பி.எம்-பிரணாம் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உரங்களின் நிலையான மற்றும் சீரான பயன்பாட்டை ஊக்குவித்தல், மாற்று உரங்களை பயன்படுத்துதல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், மண்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply