விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பின்னடைவு இல்லை.

870 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ஏ.டி.சி.ஓ.,) பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. ஏ.டி.சி.ஓ.,க்களின் காலியிடங்களை நிரப்புவதில் பின்னடைவு இல்லை. ஏ.டி.சி.ஓ.க்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2022 முதல் கூடுதலாக 796 ஏ.டி.சி.ஓ. பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காலியாக உள்ள ஏ.டி.சி.ஓ. பணியிடங்கள் நேரடித் தேர்வு மூலமும், துறை ரீதியான தேர்வு மூலமும் நிரப்பப்படுகின்றன. 400 இளநிலை நிர்வாகி  (ஏடிசி) பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி ஆட்சேர்ப்பு நடைமுறை நிறைவடைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தற்போது மூன்று பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். இது தவிர, மேலும் 356 இளநிலை நிர்வாகி (ஏடிசி) பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கையை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) தொடங்கியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் திரு வி.கே.சிங்  இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply