“பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட்ட நரிகுறவர்களின் ST சான்றிதழை அங்கிகரித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பில் மத்திய, மாநில அரசுகள் இட ஓதுக்கீடு அளிக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

நரிக்குறவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்கள், வேண்டுகோள் மூலம் கடந்த ஒருசில மாதத்திற்கு முன்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் மிகவும் பின்தங்கிய நரிக்குறவர்கள் சமுதாயம் முன்னேற மத்திய அரசு வழிவகுத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது.

நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் நடத்தும் வேலைவாய்ப்பு குரூப் – 2 தேர்வு எழுத பலர் விண்ணப்பித்துள்ளார்கள். பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் முன்னர் அளித்த விண்ணப்பத்தில் M.B.C சாதிச் சான்றிதழை இணைத்துள்ளனர். தற்பொழுது மத்திய, மாநில அரசுகள் M.B.C சான்றிதழை பெற்றுக்கொண்டு ST சாதிச் சான்றிதழாக வழங்கி வருகிறது.

கடந்த காலங்களில் மிகவும் நலிவடைந்த, குறைந்த அளவிலுள்ள நரிக்குறவர்கள், பெருபான்மையாகவுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில், அவர்களுடன் போட்டியிட முடியாமல், முன்னேற்றம் அடைய முடியாமல் தவித்து வந்துள்ளனர். இன்னிலையில் மத்திய அரசு நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவித்ததால் அவர்கள் வாழ்க்கையில் ஒர் வெளிச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

குருப் தேர்விர்க்கு விண்ணபித்து, முதல் தேர்வில் வெற்றிப்பெற்று, மேற்கொண்டு நடைபெற இருக்கும், நேர்முக தேர்விற்கு செல்ல இருக்கும் விண்ணப்பதாரர்களின் ST சான்றிதழை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய அவர்களுக்கு அங்கிகாரமும், இட ஒதிக்கீட்டில் உரிய பங்கீட்டையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply