மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நிணநீர் யானைக்கால் நோய்க்கான வருடாந்திர நாடு தழுவிய அளவில் இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

நாட்டில் 2027-ம் ஆண்டுக்குள் நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அதனை ஒழிப்பதில் உலகளவிலான இலக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த இலக்கை இந்தியா அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தெரிவித்துள்ளார்.

நிணநீர் யானைக்கால் நோய்க்கான வருடாந்திர நாடு தழுவிய அளவில் இரண்டாம் கட்ட தடுப்பு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.பங்கேற்பு, அரசு மற்றும் சமூக அணுகுமுறை மூலம், இந்த நோயை நாட்டிலிருந்து முற்றிலும் அகற்ற முடியும் என்று மத்திய அமைச்சர் கூறினார். அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் உள்ள 81 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட முகாம் இன்று (10.08.2023) தொடங்குகிறது.சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் டி.எஸ்.சிங் தியோ, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் திரு பிரிஜேஷ் பதக், ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் திரு நிரஞ்சன் பூஜாரி, அசாம் சுகாதார அமைச்சர் திரு கேஷப் மஹந்தா, ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் திரு பன்னா குப்தா ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, நோயைத் தடுக்க மருந்துகளை உட்கொள்வதோடு நின்றுவிடாமல், கொசுக்கள் மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் உதவ வேண்டும், என்றும் இல்லையெனில் நமது இலக்கை அடைவதற்கான முன்னேற்றம் கணிசமாக தடைபடும்” என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் மருத்துவ மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டுதல்களை டாக்டர் மாண்டவியா வெளியிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply