உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சான்றளிக்கப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் சுகாதார மற்றும் உடற்பயிற்சி வல்லுநர்கள் அங்கீகரிக்கும் போது அவர்கள் சான்றளிக்கப்பட்ட சுகாதார / உடற்பயிற்சி வல்லுநர்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்

 தங்களை சுகாதார வல்லுநர்கள் அல்லது மருத்துவ பயிற்சியாளர்களாகக் காட்டிக்கொள்ளும்  பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்கள் தெளிவான பொறுப்புத்துறப்பை வழங்க வேண்டும்

பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் நலத் துறை, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் 9 ஜூன் 2022 அன்று வெளியிடப்பட்ட தவறான விளம்பரங்கள் மற்றும் தவறான விளம்பரங்களுக்கான ஒப்புதல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் 2023 ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட “ஒப்புதல் எவ்வாறு” வழிகாட்டி கையேடு ஆகியவற்றின் முக்கிய நீட்சியாகும்.

சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்,  இந்திய விளம்பரத் தர நிர்ணய கவுன்சில் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் நடத்தப்பட்ட விரிவான விவாதங்களுக்குப் பிறகு  கூடுதல் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கூடுதல் வழிகாட்டுதல்கள், தவறான விளம்பரங்கள், ஆதாரமற்ற கூற்றுகள்  கையாள்வதைத் தடுப்பது, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களின்படி, சான்றளிக்கப்பட்ட மருத்துவப்  பயிற்சியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சான்றிதழ்களை வைத்திருக்கும் சுகாதார மற்றும் உடற்பயிற்சி வல்லுநர்கள் தகவல்களைப் பகிரும்போது, தயாரிப்புகள் அல்லது சேவைகளை ஊக்குவிக்கும் போது அல்லது ஏதேனும் உடல்நலம் தொடர்பான உரிமைகோரல்களைச் செய்யும்போது, அவர்கள் சான்றளிக்கப்பட்ட சுகாதார / உடற்பயிற்சி வல்லுநர்கள் மற்றும் மருத்துவப் பயிற்சியாளர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

பிரபலங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் மெய்நிகர் முறையில் செல்வாக்கு செலுத்துபவர்கள், தங்களை சுகாதார வல்லுநர்கள் அல்லது மருத்துவப்  பயிற்சியாளர்கள் என தாங்களாகவே காட்டிக் கொள்ளும் போது, தகவல்களைப் பகிரும்போது, தயாரிப்புகள் அல்லது சேவைகளை ஊக்குவிக்கும் போது அல்லது உடல்நலம் தொடர்பான எந்தவொரு கருத்துக்களையும் கூறும்போது, தெளிவான மறுப்புகளை வழங்க வேண்டும், அவர்களின் ஒப்புதல்கள், தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக பார்க்கப்படக்கூடாது என்பதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply