மக்களின் வாழ்க்கையை எளிதாக மாற்றியமைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது: மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், தில்லியில் நடைபெற்ற உலக வங்கி டிஜிட்டல் பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார். இதில் பேசிய அவர், மக்களின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா  வெற்றி பெற்றுள்ளதாக  எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு  மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாக  அவர் கூறினார்.

அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் முறைசாரா துறைகள் முறைப்படுத்தப்பட்டதாக திரு ராஜீவ் சந்திரசேகர் எடுத்துரைத்தார். யுபிஐ மற்றும் ஆதார் போன்ற முன்முயற்சிகள் உள்பட நிர்வாகத்தை மேம்படுத்தியதோடு மட்டுமல்லாமல், துடிப்பான சூழலையும் உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் வெற்றி, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பாக  பிற நாடுகளின்  ஆர்வத்தையும் தூண்டியுள்ளது என்று திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply