கர்நாடகா அரசு தன் பிடிவாத போக்கை கைவிட்டு, தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய தண்ணீரைத் தர வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று புது டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டதில் கர்நாடகா அரசு இதுவரை தமிழகத்திற்கு தரவேண்டிய 37.9 டிம்சி தண்ணீரை தரவேண்டும் என்று கேட்டதற்கு, கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க, கர்நாடகாவில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசிற்கு அழுத்தம் கொடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிப்பது ஏற்புடையதல்ல. கூட்டணி அரசியலைவிட தமிழக விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை மிக முக்கியம். அதனை உணர்ந்து தி.மு.க அரசு செயல்பட வேண்டும். மேலும் கர்நாடகா அரசின் பிடிவாத போக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல. எப்பொழுதெல்லாம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது.

விவசாயிகள் வர்க்கம் என்பது, இந்திய அளவில் ஒரே வர்க்கம். அது கர்நாடாகாவாக இருந்தாலும் சரி, தமிழகமாக தமிழகமாக இருந்தாலும் சரி, இருந்தாலும் சரி, கேரளாவாக இருந்தாலும் சரி எல்லோரும் சமம். ஆகவே விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனையில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் கர்நாடகா அரசு செயல்பட வேண்டும். காநாடாக அரசு மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிய பங்கீட்டை அளிக்க வேண்டும்.

தமிழக விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டு இருக்கும் இந்நிலையில் கர்நாடகாவை ஆளும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் அரசிடம் பேசி தமிழகத்திதற்கு உரிய நீரை பெற்றுதருவது தமிழக திமுக அரசின் கடமை. அதை உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்‌ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply