கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தை செயல்படுத்துவதை குறித்து விரிவன ஆலோசனை நடைபெற்று வருகிறது. திட்டத்தை பொறுத்தவரை செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. 3 கட்டங்களாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. திட்டத்தை செயல்படுத்தக்கூடிய விதமாகவும் தற்போது திட்டம் எவ்வாறு செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை கையாண்டு கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இதற்கு முன்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டங்களில் அறிவுறுத்தியிருந்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply