77-வது சுதந்திர தின விழாவுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற செங்கோட்டையில் இருந்து கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்குகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 2023 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வரலாற்றுச சிறப்புமிக்க நினைவுச்சின்னத்தின் கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு வழக்கமான உரையை நிகழ்த்துகிறார். இந்த ஆண்டு சுதந்திர தினம் மார்ச் 12, 2021 அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து பிரதமரால் தொடங்கப்பட்ட ‘விடுதலையின் அமிர்தப் பெருவிழா’ கொண்டாட்டங்களை நிறைவு செய்யும், மேலும் 2047 க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான திரு நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் மீண்டும் ‘ அமிர்த காலத்துக்கு’ நாட்டை புதிய உத்வேகத்துடன் அறிமுகப்படுத்தும். 77-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட பல்வேறு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply