குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இல்லந்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற யாத்திரைகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உரையாற்றினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இல்லந்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற யாத்திரைகளில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர்  பூபேந்திர படேல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு, கைகளில் மூவண்ணக் கொடியுடன் நிற்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும்போது, நாட்டின் ஒவ்வொரு குழந்தை மற்றும் இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்க்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சி வெற்றியடைந்து வருவதாகத் தெரிகிறது என்று  கூறினார். ஆகஸ்ட் 15, 2022 அன்று, மூவண்ணக் கொடி ஏற்றாத, செல்பி எடுக்காத வீடே நாட்டில் இல்லை என்று அவர்  கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மீண்டும் மூவண்ணக் கொடியை ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்று திரு. ஷா கூறினார். குஜராத்தில் இருந்து மண்ணையும், மூவண்ணக் கொடியையும் சுமந்து செல்லும் இளைஞர்கள் தில்லியை அடைவார்கள். இந்த இளைஞர்கள் நாடு முழுவதிலுமிருந்து கொண்டு வரப்பட்ட மண் மற்றும் மூவண்ணக் கொடியை தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பார்கள். இளைஞர் சக்தி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிறந்த இந்தியாவுக்கான உறுதியை பரப்பும் என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply