சுதந்திர தின 2023 சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீர தீர செயல்களுக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் சிஆர்.பிஎப் வீரர் ஒருவருக்கும், வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கங்கள் 229 பேருக்கும், மிகவும் சிறப்பு மிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான காவல் பதக்கங்கள் 82 பேருக்கும், சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் 642 பேருக்கும் வழங்கபட உள்ளது.
வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கம் விருது பெறும் 230 பணியாளர்களில் 125 பணியாளர்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 71 பணியாளர்கள், வடகிழக்குப் பிராந்தியத்தைச்சேர்ந்த 11 பணியாளர்களுக்கு வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. வீர தீர செயல்களுக்கான விருதுகளை பெறும் பணியாளர்களில் சிஆர்பிஎப்- சேர்ந்த 28 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 பேர், ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த 55 பேர், சத்தீஷ்கரைச் சேர்ந்த 24 பேர், தெலங்கானாவைச் சேர்ந்த 22 பேர், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 பேர் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் இதர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுதல், குற்றத்தைத் தடுப்பது அல்லது குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவற்றில் வெளிப்படையான வீரத்தின் அடிப்படையில் வீரத்திற்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம், மிகவும் சிறப்பு மிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவரின் சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம், காவல் துறை சேவையில் சிறப்பான சாதனைக்காகவும், திறமையான சேவைக்கான காவல் பதக்கம், கடமையில் அர்ப்பணிப்புடன் கூடிய மதிப்புமிக்க சேவைக்காகவும் வழங்கப்படுகின்றது.
தமிழ்நாட்டின் பெருநகர சென்னையில் காவல் துறை துணை ஆணையர் திரு எஸ். அரவிந்த், தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு என். ஸ்டீபன் ஜேசுபதம், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு பி தங்கதுரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை உதவி ஆய்வாளர் திரு எஸ். அனந்தராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு என் பாலசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு ஹெச். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டின் பெரம்பலூர் காவல் துறை கூடுதல் ஆய்வாளர் திரு மதியழகன், தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு ஜெ. ராஜூவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை உதவி ஆணையர் திரு எஸ். சங்கரலிங்கம், தமிழ்நாட்டின் திருச்சி நகரைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு இ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு எம். ரவீந்திரன், தமிழ்நாட்டின் பெருநகர சென்னையைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு ஏ. சிவ ஆனந்த், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை
ஆய்வாளர் திரு டி. திருமலை கொழுந்து, தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த சிறப்புப்பிரிவு காவல் துறை ஆய்வாளர், திரு. எஸ் முத்துமலை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு எம். புகழ்மாறன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு டி. மாரியப்பன், தமிழ்நாட்டின் பெருநகர சென்னையைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு ஆர் கமலக்கண்ணன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு எஸ். தனபாலன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பெண் காவல் துறை துணை ஆய்வாளர் திருமதி எஸ் செண்பகவள்ளி ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்