பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை மறுஆய்வு செய்யதேசிய நெடுஞ்சாலை ஆணையம் வடிவமைப்பு பிரிவை அமைத்துள்ளது.

பாலங்கள், சிறப்பு கட்டமைப்புகள் மற்றும் சுரங்கப்பாதைகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை திறம்பட மறுஆய்வு செய்வதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு வடிவமைப்பு பிரிவை அமைத்துள்ளது, இது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள், கட்டமைப்புகள், சுரங்கங்களை திட்டமிடுதல், வடிவமைத்தல், கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கும்.

இப்பிரிவானது திட்டத் தயாரிப்பு, புதிய பாலங்கள் கட்டுதல், நிலவர ஆய்வுகள், ஏற்கனவே உள்ள பழைய / பழுதடைந்த பாலங்களின் புனரமைப்பு, முக்கியமான பாலங்கள், கட்டமைப்புகள், சுரங்கங்களின்  ஆரோக்கியத்தை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்யும். ஜூன் 2023 க்குப் பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட  தனிப் பாலங்கள் மற்றும் சிறப்பு கட்டமைப்புகளையும் இது மறுஆய்வு செய்யும்.

மேலும், இப்பிரிவானது 200 மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் மற்றும் கட்டமைப்புகளின் நிர்மாண முறைகள், தற்காலிக கட்டமைப்புக்கள், தூக்குதல், ஏவுதல் முறைகள், முன் அழுத்த முறைகள் மற்றும் சீரற்ற அடிப்படையில் சிறப்பு கட்டமைப்புகள் போன்றவற்றையும் மீளாய்வு செய்யும்.

இது தவிர, நடைபெற்று வரும் திட்டங்களில் 200 மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து பாலங்கள் / கட்டமைப்புகளின் வடிவமைப்புகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.  மேலும், 60 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள பிற பாலங்கள், 200 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள கட்டமைப்புகள் மற்றும் சுரங்கங்கள், 10 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள ஆர்.இ சுவர்கள் மற்றும் பிற சிறப்பு கட்டமைப்புகளின் வடிவமைப்புகள் சீரற்ற அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும்.

இப்பிரிவானது ஆலோசகர்கள், பால வடிவமைப்பு வல்லுநர்கள், சுரங்கப் பாதை வல்லுநர்கள், ஆர்.இ சுவர் வல்லுநர்கள், ஜியோடெக் வல்லுநர்கள், மண் / பொருள் சோதனை ஆய்வகங்கள் போன்றவற்றைக் கொண்ட ஆலோசகர்கள் குழுக்களை நியமிக்கும். இப்பிரிவில் வடிவமைப்பு வல்லுநர்கள் / ஆராய்ச்சி மாணவர்கள் / ஐஐடி / என்ஐடிகளிலிருந்து முதுகலை மாணவர்கள் தேவைக்கேற்ப கட்டமைப்புகளின் வடிவமைப்பு மதிப்பாய்வுகளை மேற்கொள்வார்கள்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply