2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.466.77 கோடி மதிப்புள்ள காதிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன; உற்பத்தியை ரூ.303.39 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது: காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தலைவர் தகவல்.

மத்திய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் (எம்எஸ்எம்இ) அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தலைவர் திரு மனோஜ் குமார்  தமிழ்நாட்டுப் பயணத்தின்போது காதி மற்றும் கிராமத் தொழில் செயல்பாடுகள் பலவற்றையும் தென்னிந்திய மக்களுக்குப் பயன்தரும் பல திட்டங்களையும் தொடங்கிவைத்தார். இதன் ஒரு பகுதியாக 2023 ஆகஸ்ட் 19 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற காதி கைவினைத் தொழிலாளர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய அவர், வறுமை, பசி பட்டினி  மற்றும் வேலையின்மைக்கு எதிரான ஆயுதமாகக் காதி  செயல்படுகிறது என்றும் கிராமங்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதோடு பெண்களுக்கு  அதிகாரமளித்தலை ஊக்குவிக்கிறது என்றார். 

நித்தி ஆயோக் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 13.05 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் மக்களின் கனவுகள் நனவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

மகாத்மா காந்தி தலைமையின் கீழ் கதர் தேசிய இயக்கத்தின் பெருமையாக இருந்தது. தற்போது பிரதமர் மோடி வழிகாட்டுதலின் கீழ் ‘தற்சார்பு இந்தியாவின்’ அடையாளமாக அது இருக்கிறது என்று திரு மனோஜ் குமார் கூறினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் காதியை ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக காந்தியடிகள் பயன்படுத்திய நிலையில், பிரதமர் மோடி, வறுமையை ஒழிப்பதற்கும், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கும், வேலையின்மையைப் போக்குவதற்கும் காதியை ஒரு சக்திவாய்ந்த, வெற்றிகரமான ஆயுதமாக மாற்றியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் கதர் உற்பத்தி 260 சதவீதமும், கதர் விற்பனை 450 சதவீதமும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,  2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள காதி நிறுவனங்கள் ரூ.262.55 கோடிக்கு  உற்பத்தியையும், ரூ.466.77 கோடிக்கு விற்பனையையும் பதிவு செய்துள்ளன. இதன் மூலம் 14,396 கைவினைஞர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்  உற்பத்தியை ரூ.303.39 கோடியாகவும், விற்பனை ரூ.477.02 கோடியாகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

 சிறப்பாக செயல்பட்ட நூல் நூற்பவர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்க விருதுகளை இந்நிகழ்வில் வழங்கி கௌரவித்த திரு மனோஜ் குமார், மரக்கழிவுகளிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பது  குறித்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சுமார் 40 கைவினைக் கலைஞர்களுக்குக் கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க இயக்குநர் திரு பி.வாசுதேவன், தமிழ்நாடு சர்வோதய சங்கத் தலைவர் திரு ராஜு, செயலாளர் திரு சரவணன்  கே.வி.ஐ.சி மூத்த அதிகாரிகள், 800 கிராமக்  கைவினைஞர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பிரதமரின்  ஊரக வளர்ச்சித் திட்டப் பயனாளிகளின் வெற்றிக் கதைகளை விளக்கும் கையேட்டினைத் திரு மனோஜ் குமார் வெளியிடப்பட்டார்.  காதித் தொழிலாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply