வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள அதிமுக மாநில மாநாட்டை மதுரையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை 51 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை சற்றே ஸ்தம்பித்தது.
அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றபோது, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டு நிறைவு பெறுவதை தொடர்ந்து அக்கட்சியின் பொன்விழா மாநாட்டை மதுரையில் நடத்துவதாக அறிவித்து இருந்தார். அவர் அறிவித்தப்படி, இன்று (ஆக.20) அதிமுக மாநில மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் கோலாகலமாக தொடங்கியது.
கே.பி.சுகுமார்