கொவிட்-19 இன் பேரழிவுகரமான மனித, பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்பு வலுவான ஒரு சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கும், தொற்றுநோய்த் தடுப்பு, தயார்நிலை மற்றும் பதிலளிப்பதற்கான கூடுதல் வளங்களைத் திரட்டுவதற்கும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில், உலக சுகாதார அமைப்பின் 6 பொது சுகாதார அவசரநிலைகளில் 5 சர்வதேச நிலையிலானவையாகும். இதன் விளைவாக, எந்தவொரு தொற்றுநோய்த் தயார்நிலை மற்றும் அவற்றை எதிர்கொண்டு விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் ஒரு சுகாதார அணுகுமுறை தேவை என்பது தெளிவாகியுள்ளது.
மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சமர்ப்பித்த 25 மில்லியன் டாலர் பரிந்துரைக்கு ஜி20 தொற்றுநோய் நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜி20 தலைமையின் கீழ் நிறுவப்பட்ட தொற்றுநோய் நிதியம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கவனம் செலுத்தி, தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் அவற்றை எதிர்கொண்டு திறன்களை வலுப்படுத்த முக்கியமான முதலீடுகளுக்கு நிதியளிக்கிறது.
தொற்றுநோய் நிதியம் முதல் அழைப்பில் சுமார் 350 விருப்ப விண்ணப்பங்களும் மற்றும் 180 முழு பரிந்துரைகளையும் பெற்றது, 338 மில்லியன் டாலர் அளவில் மட்டுமே மானியம் அளிக்கக் கூடிய நிலையில் மொத்தம் 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மானியக் கோரிக்கைகளைப் பெற்றது. தொற்றுநோய் நிதியத்தின் நிர்வாகக் குழு 20 ஜூலை 2023 அன்று ஆறு பிராந்தியங்களில் உள்ள 37 நாடுகளில் எதிர்கால தொற்றுநோய்களுக்கு மீள்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் முதல் சுற்று நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 19 மானியங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா