தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.8.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 7 கோடியே 58 இலட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், தேனி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 13 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தலா 50 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
கே.பி.சுகுமார்