ஐ.என்.எஸ். சுனைனா ஆகஸ்ட் 21, 2023 அன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்தில் நுழைந்தது. இந்தக் கப்பல் தென்னாப்பிரிக்க கடற்படை கப்பலான எஸ்.ஏ.எஸ் கிங் முதலாம் செகுகுனேவுடன் பயிற்சியை மேற்கொண்டது. கடலில் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட பின்னர், கப்பல் டர்பன் துறைமுகத்திற்குள் நுழைந்தது. இந்த கப்பலை டர்பன் கடற்படை தள கமாண்டிங் கொடி அதிகாரி கென்னத் சிங் மற்றும் எச்.சி.ஐ பிரிட்டோரியா அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான 30 ஆண்டுகால தூதரக கூட்டாண்மையை நினைவுகூருவதோடு, இந்திய கடற்படை மற்றும் தென்னாப்பிரிக்கா கடற்படை ஆகிய இரண்டிற்கும் இடையிலான பரஸ்பர செயல்பாடு, கூட்டு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைமுக அழைப்பின் போது, இரு கடற்படைகளும் தொழில்முறை தொடர்புகள், நிபுணத்துவ பரிமாற்றங்கள் மூலம் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், கூடுதலாக மூத்த ராணுவ மற்றும் சிவில் பிரமுகர்களுடன் கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா