வணிகக் கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்றம் தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த ஒப்பந்தம் இந்திய கடற்படை மற்றும் ஃபிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை இடையே கையெழுத்தானது.

வணிகக் கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்றம் தொடர்பான  நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த ஒப்பந்தம் இந்திய கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை இடையே இன்று (23.08.2023) கையெழுத்தானது.

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை கமாண்டன்ட் ஆர்டெமியோ எம் அபு ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். ஃபிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை கமாண்டன்ட் இந்தியா வந்துள்ள நிலையில், புதுதில்லியில் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஃபிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை இடையே இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்  குறித்த ஒப்பந்தம், கையெழுத்தாகியிருப்பது,  வணிகக் கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பரிமாற்றங்களைச் செயல்படுத்த உதவும். இது இந்த பகுதியின் மேம்பட்ட கடல் பாதுகாப்புக்கும் பங்களிப்பை வழங்கும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply