வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான் – 3 விக்ரம் லேண்டர். நிலவில் தடம் பதித்ததன் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்தியா, திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் – 3 லேண்டர் தரையிறங்கியது. சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவுக்கு சந்திரயான் -3 மேற்கொண்ட 3.84 லட்சம் கி.மீ. தூர பயணம் முழுவதும் நாசாவும் ஈ.எஸ்.ஏ.வும் உதவி செய்துள்ளன. விண்வெளியில் வரலாறு படைக்க சந்திரயான்-3 தயாராகியுள்ளது. திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குகிறது, இதை உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது.
கடைசி 15 நிமிடங்கள் முக்கிய கட்டமாக உள்ளதால் நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 2 திட்டம் மூலம் தரையிறங்க முயன்றது. இது இறுதிக்கட்டத்தில் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளது. சந்திரயான் – 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளத, இந்த செயல்பாடு என்பது மொத்தம் 15 நிமிடங்கள் நடக்கும் நிலையில் கடைசி 7 நிமிடங்கள் தான் மிகவும் முக்கியம். அங்கு தான் மிகப்பெரிய சவால் உள்ளது எனவும், அந்த திக் திக் நிமிடத்தில் விக்ரம் லேண்டர் எப்படி நிலவில் தரையிறங்கும்? என்பது பற்றிய சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது.
திவாஹர்