பொதுமக்களின் பங்கேற்பின் மூலம் சட்டவிரோத நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்க உதவும் கனன் பிரஹாரி செயலி.

புவி வரைப்படத்துடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் எழுத்துவடிவ தகவல்கள் மூலம் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகள்  பற்றி குடிமக்கள் புகார் அளிக்க  கனன் பிரஹரி செயலியை நிலக்கரி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இது நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு என்று அழைக்கப்படும் தொடர்புடைய  வலை தளம் காந்திநகரில் உள்ள பாஸ்கராச்சார்யா  விண்வெளி மற்றும் புவி தகவல் மையம் மற்றும் ராஞ்சியின் சி.எம்.பி.டி.ஐ ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் சுற்றுச்சூழலுக்கும், சட்டவிரோத சுரங்கத்தில் ஈடுபடுவோரின் உயிருக்கும், பாரம்பரிய வாழ்வாதார தளத்திலும் நாட்டின் பொருளாதாரத்திலும் பொதுவான சீரழிவையும் ஏற்படுத்துகிறது. விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராக வெளிப்படையான அரசு நடவடிக்கை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் பொதுமக்களின் பங்கேற்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. கனன் பிரஹாரி மொபைல் பயன்பாடு, சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் குடிமக்களுக்கு பங்களிக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது.

கனன் பிரஹரி மொபைல் பயன்பாடு மற்றும் சி.எம்.எஸ்.எம்.எஸ் இணைய தளத்தின் நோக்கம் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் குறித்து புகாரளிப்பதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதாகும்.

கனன் பிரஹாரி மொபைல் பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

நிகழ்வுகளைப் புகாரளித்தல்: பயனர்கள் புகைப்படங்களை எடுப்பதன் மூலமும், சம்பவம் குறித்த கருத்துக்களை வழங்குவதன் மூலமும் சட்டவிரோத சுரங்க நிகழ்வுகளை எளிதாக புகாரளிக்க முடியும். ஜி.பி.எஸ் இருப்பிட அம்சத்தை இயக்குவதன் மூலம் புகைப்படங்களின் ஜியோடேகிங்கை இந்தப் பயன்பாடு அனுமதிக்கிறது.

ரகசியத்தன்மை: பயனரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படுகிறது, தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

புகார் கண்காணிப்பு: புகார்தாரர்கள் ஒரு புகார் எண்ணைப் பெறுகிறார்கள், இது கனன் பிரஹாரி மொபைல் பயன்பாட்டில் தங்கள் புகாரளிக்கப்பட்ட புகார்களின் நிலையை எளிதாகக் கண்காணிக்க அவர்கள் பயன்படுத்தலாம்.

இதுவரை, கனன் பிரஹாரி மொபைல் பயன்பாடு குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தம் 483 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 78 புகார்கள் துல்லியமானவை என சரிபார்க்கப்பட்டு, அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனன் பிரஹாரி மொபைல் பயன்பாடு ஆண்ட்ராய்டு அடிப்படையிலான மொபைல் போன்களுக்கான கூகுளின் பிளே ஸ்டோரிலும், ஐஓஎஸ் ஆதரவு ஐபோன்களுக்கான ஆப்பிள் ஸ்டோரிலும் கிடைக்கிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply