மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா, நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி, மற்றும் விவசாய அமைச்சர் டேமியன் ஓ கானர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் விவசாய அமைச்சர் டேமியன் ஓ கானர் உடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொற்றுநோயியல், விலங்கு நோய் மேலாண்மை, பண்ணையில் உயிர் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைக் கண்டறிதல் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து இரு தரப்பினரும் பயனுள்ள வகையில் கலந்துரையாடினர். இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து அரசின் முதன்மை தொழில் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு விருப்பப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply