மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி அமைச்சர் திரு டேமியன் ஓ’கானர் ஆகியோர் புதுதில்லியில் நேற்று (28-08-2023) இருதரப்பு சந்திப்பை நடத்தினர். 22 மே 2023 அன்று போர்ட் மோர்ஸ்பியில் இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையிலான சிறந்த சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு, பரந்த அடிப்படையிலான உறவை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு அமைந்தது.
நியூசிலாந்தும் இந்தியாவும் மக்களுக்கு இடையே வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளன; இவை வணிகம், கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் விரிவடைந்துள்ளன. நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி சமூகத்தினர் அந்நாட்டுக்கு வலுவான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்த இணைப்புகள் நமது பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன.
இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பில் வலுவான முன்னேற்றம் இருப்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் இதை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக வழக்கமான அடிப்படையில் இருதரப்பு சந்தப்பை நடத்த அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
திவாஹர்