கொல்கத்தா மெட்ரோ ரயில்வே லண்டன், மாஸ்கோ, பெர்லின், முனிச் மற்றும் இஸ்தான்புல் மெட்ரோவின் எலைட் கிளப்பில் உறுப்பினராக உள்ளது.

அக்டோபர் 24, 1984 அன்று இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோவான கொல்கத்தா மெட்ரோ ரயில் கிட்டத்தட்ட 40 நீண்ட ஆண்டுகளாக ஜாய் நகரமான கொல்கத்தாவின் உயிர்நாடியாக செயல்பட்டு வருகிறது.

கொல்கத்தா மெட்ரோ இரயில்வேயில், மெட்ரோ ரேக்கிற்கு மின்சாரம், ஸ்டீல் மூன்றாவது தண்டவாளம் மூலம் 750 வோல்ட் டி.சி.யில் ரோலிங் ஸ்டாக்கிற்கு வழங்கப்படுகிறது. மெட்ரோ ரேக்கில் பொருத்தப்பட்ட எஃகால் செய்யப்பட்ட மூன்றாவது தண்டவாளம் கரண்ட் கலெக்டர் (டி.ஆர்.சி.சி) மூன்றாவது தண்டவாளத்திலிருந்து மின்னோட்டத்தை சேகரிக்கிறது. கொல்கத்தா மெட்ரோ ரயில் கடந்த 40 ஆண்டுகளாக எஃகு மூன்றாவது தண்டவாளத்தைப் பயன்படுத்துகிறது. கொல்கத்தா  மெட்ரோ ரயில்வே இப்போது கட்டுமானத்திற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வழித்தடங்களிலும் கலப்பு அலுமினியம் மூன்றாவது தண்டவாளத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த மெட்ரோ ரயில்வே மூலம்,  கொல்கத்தா லண்டன், மாஸ்கோ, பெர்லின், முனிச் மற்றும் இஸ்தான்புல் மெட்ரோவின் எலைட் கிளப்பின் உறுப்பினராக மாறும், அவர்கள் எஃகு மூன்றாவது தண்டவாளத்திலிருந்து அலுமினியம் மூன்றாவது தண்டவாளத்திற்கு மாறியுள்ளனர்.

திவாஹர்

Leave a Reply