விண்வெளித் துறையை கடந்த காலத்தின் தடைகளில் இருந்து மீட்க துணிச்சலான முடிவை எடுத்த பிரதமர் நரேந்திர மோதியின் உந்துதலைத் தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை உலகம் இன்று அங்கீகரித்துள்ளது- டாக்டர் ஜிதேந்திர சிங்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்  (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளித் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய முன்னேற்றத்தை இன்று உலகம் அங்கீகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

“பிரதமர் மோடி கடந்த கால தடைகளை உடைத்துள்ளார், சில நேரங்களில் இது ஏன் முன்பே நடந்திருக்க முடியாது என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அதேசமயம்,  நிதியை அதிகரித்து, தனியார் துறையையும், தொழில்துறையையும் உற்சாகப்படுத்தியுள்ளார். வெறும் 3-4 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் நம்மிடம் உள்ளன, “என்று அவர் ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இஸ்ரோ 380 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது, அமெரிக்க செயற்கைக்கோள்களை ஏவுவதன் மூலம் 250 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாகவும், 170 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும் சம்பாதித்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

“ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று சுமார் 8 பில்லியன் டாலராக உள்ளது, அதாவது உலகளாவிய (சந்தை பங்கில்) 2% ஆகும், ஆனால் முழு உலகமும் அதிகரித்த வேகத்தை அங்கீகரிக்கிறது, அதனால்தான் பழமைவாத கணிப்புகள் 2040-க்குள் 40 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்தன. ஆனால் நேற்று, சுமார் 2-3 நாட்களுக்கு முன்பு, ஏ.டி.எல் (ஆர்தர் டி லிட்டில்) அறிக்கை, 2040-க்குள் 100 பில்லியன் டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறது. இது ஒரு பிரம்மாண்டமான உயர்வாக இருக்கும். உலகம் இப்போது அதைத்தான் எதிர்பார்க்கிறது, ஏனென்றால் நாம் மிக வேகமாக நகரத் தொடங்கியுள்ளோம், “என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply