உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ஆர்வம் உள்ள அனைவரையும் திரு மோடி பாராட்டினார். இதைக் கொண்டாடும் வகையில் அனைவரும் சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் கூறியதாவது:
“உலக சமஸ்கிருத தின நல்வாழ்த்துகள். இதில் ஆர்வமுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். சமஸ்கிருதத்துடனான இந்தியாவின் உறவு தனித்துவமானது.”
“உலக சமஸ்கிருத தின நல்வாழ்த்துகள். இதில் ஆர்வம் உள்ள அனைவரையும் பாராட்டுகிறேன். சமஸ்கிருதத்துடன் இந்தியாவுக்கு மிகவும் சிறப்பான தொடர்பு உள்ளது. இந்த மகத்தான மொழியைக் கொண்டாடும் வகையில், சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். கீழே உள்ள பதிவில், ஒரு வாக்கியத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். #CelebratingSanskrit என்பதை பயன்படுத்த மறவாதீர்கள்.”
“வரும் நாட்களில் ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. உலகெங்கிலும் இருந்து மக்கள் இந்தியாவுக்கு வந்து நமது சிறந்த கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.
எஸ்.சதிஸ் சர்மா