இந்திய தர நிர்ணய அமைவனம் “பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்” பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது.

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “”பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்” என்ற தலைப்பில் சென்னையில் 31 ஆகஸ்ட் 2023 அன்று மானக் மந்தன் – கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது. ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தியாளர்கள், ஆயுர்வேத அறிவியல், யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் ஆய்வாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் உள்பட சுமார் 100 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் ஸ்ரீமதி ஜி பவானி, நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். BIS ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முக்கியமான திருத்தங்கள் மற்றும் பரவலான புழக்க வரைவுகளைப் பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் ஐ சங்கீதா நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

ஆயுஷ் துறையின் ஆராய்ச்சி அதிகாரி (ஆயுர்வேதம்) டாக்டர் ராகவேந்திர நாயக் மற்றும் டாக்டர் ஜி. கிருத்திகா, ஆராய்ச்சி அதிகாரி (சித்தா), ஆயுஷ் துறை ஆகியோர் தொழில்நுட்ப பேச்சாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பஞ்சகர்மா என்பது ஆயுர்வேதத்தில் ஒரு தனித்துவமான நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை முறையாகும். நோயை உண்டாக்கும் காரணிகளை தீவிரமாக நீக்குவதற்கும் தோஷங்களின் சமநிலையை பராமரிப்பதற்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் உள்ள ஐந்து நடவடிக்கைகள் யாதெனில், வாமனா விரேச்சனா, அனுவாசனா வஸ்தி , ஆஸ்தாபன வஸ்தி மற்றும் நாஸ்யா ஆகியவை அடங்கும். பஞ்சகர்மா சிகிச்சைக்கு முன்னதாக சிநேகனா (ஒலியேஷன்) மற்றும் ஸ்வேதனா (சூடேஷன்) உள்ளிட்ட சில ஆயத்த நடைமுறைகள் உள்ளன. சம்சர்ஜன கர்மா, சிகிச்சைக்கு பிந்தைய செயல்முறையாக செய்யப்படுகிறது என்று நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply