குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயாவின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இன்று (செப்டம்பர் 1, 2023) நடைபெற்ற குரு காசிதாஸ் விஸ்வ வித்யாலயாவின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசு தலைவர்நவீன உலகில்தனிநபர்கள்நிறுவனங்கள் மற்றும் நாடுகள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறினார் . அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குபொருத்தமான வசதிகள்சுற்றுச்சூழல் மற்றும் ஊக்கம் தேவை என்று அவர் கூறினார். இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். பயனுள்ள ஆராய்ச்சியின் மூலம் இந்த மையம் தனது முத்திரையைப் பதிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சந்திரயான் –3 திட்டத்தின் சமீபத்திய வெற்றி குறித்து பேசிய குடியரசுத் தலைவர்அந்த வெற்றிக்குப் பின்னால் பல ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பெற்ற திறன் மட்டுமல்லாமல்தடைகள் மற்றும் தோல்விகளால் சோர்வடையாமல் முன்னேறுவதற்கான அர்ப்பணிப்பும் உள்ளது என்று கூறினார். சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவும் இந்த வரலாற்று சாதனை குறித்து அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துமாறு குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயாவிடம் அவர் வலியுறுத்தினார்.

நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கடின உழைப்பு மற்றும் திறமையின் வலிமையால் இன்று இந்தியா அணுசக்தி  மற்றும் விண்வெளி குழுவில்  மரியாதைக்குரிய உறுப்பினராக உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தியா வழங்கிய குறைந்த செலவில்‘ ‘உயர் அறிவியல்‘ எடுத்துக்காட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாராட்டப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார். உயர் மட்ட திறனை அடைவதன் மூலம்இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சமூகம்மாநிலம் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளில் பங்கேற்க முடியும் என்று அவர் கூறினார். சவால்களுக்கு மத்தியில் வாய்ப்புகளை உருவாக்குவது வெற்றியை அடைவதற்கான சிறந்த வழியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து மனிதர்களும் சமம் என்ற அழியாத செய்தியை குரு காசிதாஸ் பரப்பியுள்ளார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்புஅவர் அடித்தட்டுபிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்களின் சமத்துவத்திற்காக வாதிட்டார். இந்த லட்சியங்களை பின்பற்றுவதன் மூலம் இளைஞர்கள் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

குரு காசிதாஸ் விஸ்வ வித்யாலயாவைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான பழங்குடிகள் இருப்பதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இயற்கை மீதான உணர்திறன்சமூக வாழ்க்கையில் சமத்துவ உணர்வு மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் பங்கேற்பு போன்ற வாழ்க்கை மதிப்புகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply