மத்தியிலும், ஜம்மு காஷ்மீரிலும் முந்தைய அரசுகள் தவறான முன்னுரிமைகளை வழங்கியதாக குற்றம் சாட்டிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைவருக்கும் நீதியை உறுதி செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தன்னைச் சந்தித்த சீமா ஜாக்ரன் மஞ்சின் தூதுக்குழுவுடன் உரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முந்தைய அரசாங்கங்களின் அப்பட்டமான பாகுபாடு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வசிப்பவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் 4% இடஒதுக்கீடு வழங்கும் முடிவில் இருந்து தெளிவாகத் தெரிகிறது, ஆனால் சர்வதேச எல்லையில் (ஐபி) வசிப்பவர்களுக்கு அது மறுக்கப்பட்டது.
“எல்லையின் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடையில் ஒரு பிரிவு இளைஞர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையிலான மனிதாபிமானமற்ற பாகுபாட்டிற்கு மோசமான எடுத்துக்காட்டு என அவர் கூறினார்.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகுதான், இந்த முரண்பாடு சரிசெய்யப்பட்டது சர்வதேச எல்லையில் உள்ள இளைஞர்களுக்கும் அதே நன்மை வழங்கப்பட்டது என்று கத்துவா-உதம்பூர்-தோடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவை எம்.பி.யான அமைச்சர் நினைவூட்டினார்.
ஜம்மு-காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் அகதிகளுக்கு அவர்களின் குடியுரிமை மற்றும் சொத்துக்களின் அரசியலமைப்பு உரிமைகளை இழந்ததற்காக பிரதமர் மோடி வரலாற்றில் இடம் பெறுவார். ஜம்மு காஷ்மீரில் குடியேறிய அகதிகளுக்கு வாக்குரிமை கூட வழங்கப்படவில்லை. மேற்கு-பாகிஸ்தான் அகதிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்